நம்பிக்கையில்லா பிரேரணை நல்லது:மேர்வின் சில்வா!



மக்களை பேருந்துகளில் கொண்டுவந்து அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதனை கவிழ்க்கமுயலவேண்டும் என  மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களை ஆர்ப்பாட்டங்களிற்கு கொண்டுவருவதற்கான செலவுகளை வர்த்தகர்கள் பொறுப்பேற்கின்றனர் பின்னர்  அவர்கள் அரசியல் பிரச்சாரங்களிற்கு நிதி வழங்க ஆரம்பிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் வீதிகளில் காணப்பட்டனர்,சிலருக்கு சோற்றுப்பாசல் வழங்கப்பட்டது, சிலர் பாடினார்கள் என தெரிவித்துள்ள அவர்  சஜித் ஆட்சியை கைப்பற்ற விரும்பினால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

No comments