ஊடுருவுகின்றது இந்தியா:தென்னிலங்கையில் ஒப்பாரி!வேவு விமானமொன்றை கொள்வனவு செய்யவேண்டும் என நிர்பந்திப்பதன் மூலம்  இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள்  இந்தியா ஊடுருவ முயல்கின்றது என இலங்கையை சேர்ந்த சிங்கள பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளிற்கு அமைச்சரவை அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளது என  அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவிடமிருந்து ஒரு மில்லியன் டொலர் கடனுதவியை பெறுவதற்காக பசில் ராஜபக்ச இந்தியா செல்வதற்கு முன்னர் பல யோசனைகைளிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையிடமிருந்து இந்தியா கடன்களை பெறுவதற்காக இந்த யோசனைகளிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவேண்டியிருந்தது.

திருகோணமலை எண்ணெய் குதம், சம்பூர் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டம்,மன்னாரில் எரிசக்தி திட்டம் ஆகியவற்றிற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னரே இது இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது

அமைச்சரவை அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ள சில யோசனைகள் தேசிய நலன்களை கருத்தில் ஆழமாக ஆராயப்பட்டிருக்கவேண்டியவை என இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டிஓ228 கண்காணிப்பு Nவு விமானத்தை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் இந்தியா இலங்கைக்கு ஒரு விமானத்தை இலவசமாக  வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வருடங்களாகும் என்பதாலேயே இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கடற்படையை சேர்ந்த கண்காணிப்பு விமானத்தை கண்காணிப்பு மீட்பு பணிகளிற்கு பயன்படுத்துவதற்காக இடைக்காலத்தில் இந்தியா கடனிற்கு வழங்கும் 

ஆனால் முழு ஓப்பந்தமும்  இலங்கை மீதான நிபந்தனையாக காணப்படுகின்றது - இந்தியா வழங்கும் கடனி;ன் மூலம் இலங்கை டோனியர் விமானமொன்றை கொள்வனவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு இயந்திரங்களை கொண்ட டோனியர் விமானங்களை இலங்கை கடற்படை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தும்.

குறிப்பாக விசேட பொருளாதார வலயத்தை கண்காணிப்பதற்கு பயன்படுத்தும் என அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனியர் விமானத்தை இந்தியா இலங்கைக்கு கடனிற்கு வழங்கியுள்ள அதேவேளை விமானத்தை பயன்படுத்துவது கையாள்வது குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து ஐந்து தொழில்நுட்ப நிபுணர்கள் இலங்கைக்கு வந்து தங்கியிருந்து பயிற்சிகளை வழங்குவார்கள்.

இந்த உடன்படிக்கை இலங்கை மூன்றாவது விமானத்தை கொள்வனவு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது ஆனால் ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகள் எங்களிற்கு இலவசமாக வழங்கியிருக்கும் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

டோனியர் விமானத்தின் இன்னுமொரு சிக்கல் என்னவென்றால் அதன் பயன்பாடு தொடர்பானது என தெரிவித்துள்ள பாதுகாப்பு நிபுணர் இந்;தியாவுடன் இணைந்து ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்படுமா? என்பது தெளிவாகயில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை பத்திரத்தை உன்னிப்பாக அவதானித்தால் இலங்கை சேகரிக்கப்பட்ட தகவல்களை வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ள முடியாது என்பது தெளிவாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் இலங்கை அரசாங்கத்தின் சொத்தாக காணப்படும்.இலங்கை அரசாங்கம்  எழுத்துமூல அனுமதியை வழங்காமல் இந்திய அரசாங்கம் சேகரிக்கப்பட்ட எந்த தகவலையும் மூன்றாம் தரப்பிற்கு வழங்க முடியாது .இலங்கை அரசாங்கம் அந்த தகவல்களை எவ்வாறு இரகசியமாக பேணுகின்றதோ அதேபோன இந்தியாவும் இரகசியதன்மையை பேணவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காணிப்பு விமானம் இலங்கையில் செயற்படும் இந்தியாவின் சொத்து என சுட்டிக்காட்டியுள்ள அவர் இது எங்களின் அமைப்பிற்குள் ,கடல்கண்காணிப்பிற்குள் பாதுகாப்பு அமைச்சிற்குள் ,விமானப்படைக்குள் ஊடுருவுவதற்கான வழிமுறையாகும்.இது இலங்கையின் சுதந்திரத்தினை சமரசம் செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.


No comments