இலங்கை:குப்பையினுள் செல்லும் உணவு!
மின்வெட்டு காரணமாக பெருமளவு உணவுகள் பழுதடைகின்றன அதனால் அவற்றை வீசவேண்டியுள்ளது என சிற்றூண்டிச்சாலைஉரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏழரை மணிநேர மின்வெட்டினால் குளிர்சாதனப்பெட்டிகள் பழுதடைகின்றன,அவற்றிற்குள் சேமித்து வைக்கப்படும் உணவுப்பொருட்களும் பழுதடைகின்றன என சங்கம் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு காரணமாக பால் மற்றும் மாமிச வகை உணவுப்பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை காணப்படுகின்றது . குப்பை அகற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களால் நாளாந்தம் வீணாக்கப்படும் உணவு குறித்த விபரங்களை வழங்க முடியும் .
சிற்றூண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பெரும் நட்டத்தினை சந்தித்துள்ளனர் இதனால் தங்கள் ஊழியர்களை அவர்கள்வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் .
Post a Comment