புதிய கூட்டு அவியலிற்கு விமல் ரெடி!இலங்கையில் எதிர்காலத்தில், அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளையும் 11 கட்சிகளின் கூட்டணிக்கு  இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அதன் பொதுச் செயலாளர் மஹிந்த அமவீர இதனைத் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோருடன் நாமும் இருக்கின்றோம்.

அவர்களைக் கைவிடவில்லை. எனினும், எவருக்கும் பின்னால் தாங்கள் செல்ல முடியாது என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேலைத்திட்டத்தின் கீழ் செல்வதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments