ஜெய்சங்கரிற்கு வந்தது இரத்தக்கண்ணீரா! இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது என்ற செய்தியை கோடிட்டே, ​கீழ்கண்டவாறு டுவிட் செய்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேயை தொடர்பு கொண்டு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments