ரஷ்யாவின் மூத்த ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விட்லே கெராசிமோவ் கார்க்கிவ் நகர் அருகில் நிகழ்ந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 13 ஆம் நாளை எட்டியுள்ள நிலையில் எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பை குறித்து விசாரிக்க ஐநா.நீதிமன்றம் ரஷ்யாவை விசாரணைக்கு அழைத்த நிலையில் அதனை ரஷ்யா புறக்கணித்து தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் முக்கியத் தளபதி ஒருவரை முறியடிப்புத் தாக்குதலில் கொன்றுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments