12,000 ரஷ்யப் படையினர் பலி! உக்ரைன்தெரிவிப்பு!
உக்ரைனில் கடந்த 13 நாட்களாகத் தொடரும் போரில் உக்ரைனியப் படைகளின் தாக்குதலில் 12,000 ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனியப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் ரஷ்யப் படைகளுக்கு ஏற்பட்ட இராணுவ தளபாட இழப்புக்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் கடந்த 13 நாள்கள் நடைபெறும் போரில் உக்ரைனியப் படையினர் எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட இராணுவ தளபாட இழப்புகள் குறித்து இதுவரை அவர்கள் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.
ரஷ்யா தனது தரப்பில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் 498 படையினர் கொல்லப்பட்டதாகவும் 1597 படையினர் காயமடைந்ததாகவும் அறிவித்திருந்தது.
கடந்த 13 நாட் போரில் ரஷ்யத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தளபாட இழப்புகள் குறித்து உக்ரைன் தெரிவிக்கும் தகவல்கள்
- 12,000 ரஷ்யப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 48 போர் வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 80 உலங்கு வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 303 டாங்கிகள் அழிக்கப்பட்டன.
- 120 ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டன.
- 1036 கவசவாகனங்கள் அழிக்கப்பட்டன.
- 56 பல்குழல் ஏறிகணை செலுத்திகள் அழிக்கப்பட்டன.
- 3 போர்ப் படகுகள் அழிக்கப்பட்டன.
- 474 இராணுவ ஜீப் ரக வாகனங்கள் அழிக்கப்பட்டன.
- 60 எரிபொருள் கொல்கலன் வாகனங்கள் அழிக்கப்பட்டன.
- 7 ஆளில்லா போர் வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 27 வான்காப்பு ஏவுகணைத் தொகுதிகள் அழிக்கப்பட்டன.
Post a Comment