நான் றேஸ் விடவில்லை:நாமல்!


கொழும்பு புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன மோட்டார் சைக்கிளோட்டப்போட்டிக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு புத்தளம் வீதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் இடம்பெற்ற வாகனமோட்டார் சைக்கிளோட்ட போட்டி குறித்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாங்கள் எரிபொருளிற்காக வரிசையில் பல மணிநேரம் காத்திருக்கின்ற சூழ்நிலையில் இவ்வாறான விடயங்களிற்கு அனுமதி வழங்குவதா என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் நிலைமையை கருத்தில்கொள்ளும்போது இவ்வாறு எரிபொருளை வீணடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுமக்கள் சீற்றம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சு கல்பிட்டியில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு எந்தவித அனுசரணையையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளதுடன் விளையாட்டுத்துறை அமைச்சுடன் எந்த தொடர்பும் இல்லாத அமைப்பே இதனை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

எனினும் போட்டியில் றேஸ் ஓடியவர்கள் தமது பரிசுகளை மகிந்தவிடம் பெறுவதை ஊடகங்கள் அம்பலப்படத்தியுள்ளன.No comments