ஏழு மாதமாம்:இலங்கை அமைச்சர் ?இலங்கையில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் உருவாகியுள்ள நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக நாட்டிற்கு டொலரை கொண்டுவருவதற்காக எங்களால் தேங்காயை விற்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டொலரை நாட்டிற்கு கொண்டுவரும் நெருக்கடியின் ஆரம்பத்திலிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலமும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி முயல்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஏழுஎட்டுமாதங்கள் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments