பீதி தரும் இலங்கை செய்திகள்!

 


இரவோடு இரவாக சீமெந்து விலை இலங்கையில் 1850ஆக அதிகரித்துள்ள்து.

இந்நிலையில் நாளை திங்கள்கிழமை இரவு பேருந்து கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் மற்றும் பேருந்து உரிமையாளர்களுடன் நீண்டநேர பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளிற்கு எரிபொருள் மானியம் வழங்குவது குறித்து ஆராயப்பட்டது எனினும் இது யதார்த்தபூர்வமான நடவடிக்கையில்லை என்ற கருத்து காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே பேருந்துக்கட்டணங்களின் விலைகளை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.

No comments