இலங்கை கடற்படை!:நிர்வாண உலகில்எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் எமது மீனவர்கள் இலங்கை சிறைகளில் நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படும் அவலம் இடம்பெறுவதாக இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர்  தெரிவித்தார்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி தமிழக மீனவர்கள் நேற்றைய தினம்  போராட்டம் நடாத்தினர்.

தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி விசாரித்த இலங்கை அரசை நாம் வன்மையாக  கண்டிக்கின்றோம்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த  தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி விசாரித்த இலங்கை அரசுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.

இந்த இழி செயல் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் அரசுகளும் எந்த கருத்தினையும. தெரிவிக்காதமையும் எமக்கு வருத்தம் அளிக்கின்றது என்றார்.


No comments