ஸ்ராலினிற்கு கடிதம்!

 


நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறும் கோரி வடக்கு மாகாண  மீனவர் சங்க பிரதிநிதிகள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில்,இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நோக்கி இரண்டு அரசாங்கங்களும் செயற்படவில்லை  என்பது வடக்கு மீனவர்கள் மத்தியில் கவலையாக உள்ளது.


எனவே மீனவர்கள் போராடும்போதும் ஆர்ப்பாட்டம் செய்யும் போதும்  பிரதேச செயலகங்களை  முற்றுகையிடும் போதும்  மீனவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம்  அத்தோடு இரண்டு அரசாங்கங்களும் தீர்வு பெற்றுத் தருவார்கள்  என காத்திருந்த போதிலும்  தீர்வு பெற்றுக் கொடுப்பது என்பது பேசுபொருளாக மாத்திரமே காணப்படுகின்றது.


எனவே இன்றைய தினம் இலங்கை கடற் தொழிலாளர்கள் ஒரு வேண்டுகோளினை பத்திரிகை ஊடாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்கு பத்திரிகை ஊடாக ஒரு வேண்டுகோளை அனுப்பஇருக்கிறோம்.  குறித்த கடிதத்தில்  தமிழ்நாட்டு மற்றும் எமது வட இலங்கை மீனவர்களுக்கிடையிலான தொப்புள்கொடி உறவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் இந்த கடிதம் ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரியதோடு குறித்த கடிதத்தில் இந்தியா மற்றும் இலங்கையின் வடக்கு  கடற்றொழிலாளர்களின் வேண்டுகோளாக,


வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார், -கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலில் தங்கியிருக்கும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். முப்பது வருடகால யுத்தந்தினால் சொல்லமுடியாத துயரங்களையும் அழிவுகளையும் நாங்கள் சந்தித்திருந்தோம். யுத்தம் காரணமாக வெளி மாவட்டங்களிலும் தென்னிந்தியாவிற்கும் என தொடர்ச்சியான இடப்பெயர்வுகளையும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களையும் சந்தித்திருந்தோம், யுத்த காலத்தில் எமது சமூகத்திற்கு அடைக்கலம் தந்தமைக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதற்கண் எமது நன்றியினைத்  தெரிவிக்கின்றோம்.


யுத்தத்திற்குப் பின்பு எமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டிபெழுப்ப கடுமையாக முயற்சித்த போதிலும் பல சவால்களையும் தோல்விகளையுமே நாம் சந்திக்க நேர்ந்தது. வருமானத்தின் வீழ்ச்சி மற்றும் பெரும் கடன் சுமை காரணமாக எமது இளந்தலைமுறை கடற்றொழிலையே கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. யுத்ததிற்கு பின்பான இந்த சமூக பொருளாதார சூழலுக்கான முக்கிய காரணம் தழிழ்நாட்டு இழுவைப்படகுகள்.


இந்த இழுவைப்படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வலைகளை அறுத்துச்செல்வதனால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் சொத்து இழப்புக்களைத் தவிர்க்க நாம் இழுவைப்படகுகள் வரும் நாட்களில் கடலுக்கு போகாமல் இருப்பதால் பெருமளவான வருமானத்தை இழக்கின்றோம். கடல் வளங்களைச் சுரண்டும் இழுவைமடிகளால் சிறு மீனவர்களின் உற்பத்தியில் பாரிய

வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழுவைமடி முறையால் வட இனங்கை மற்றும் தமிழ்நாட்டு சிறு உற்றொழிளர்களின் எதிர்காலமே அழிக்கப்படுகின்றது.


இந்தப்பிரச்சினை இலங்கை கடற்றொழிளாளருக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளருக்கும் இடையில் இருக்கும் வரலாற்று ரீதியான உறவையே பாதிகின்றது. இழுவைப் படகுகளை முற்றாக நிறுத்துமாறு” இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கும்  மத்தியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டுவரை பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், அவற்றின் மூலமாக ஒரு தீர்வும் எட்ட முடியவில்லை.


உண்மையில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இரு நாட்டுக் கடலிலும் இழுவைப்படகு முறையினைத் தடை செய்வதாகும். எனினும் இந்த பிரச்சினையைத் தீரப்பதற்கான அரசியல் விருப்பு  இரு நாடுகளின் மத்திய மற்றும் மாநில அரசியல் தலைமைத்துவங்களிடம் இருக்கவில்லை.


தாங்கள் கௌரவ முதலமைச்சராக பதிவியேற்ற பின்பு தென்னிந்தியாவில் வாழும் இலங்கை தமிழ் அகதி மக்களுக்காக நீங்கள் முன்வைத்த தீர்வுகளை அறிந்த நாம் உங்களுக்கு எமது நன்றிகளை கூறக் கடமைப்பட்டுள்ளோம். உங்களுடைய இவ்வாறான முற்போக்கான பார்வையில் தமிழ்நாட்டு இழுவைப்படகுகளால் பாதிக்கப்படும். வட இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு திர்வுகளைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.


No comments