ராஜபக்சர்களை காப்பாற்றவேண்டும்:ரணில் ராஜபக்ச அரசை அரசாங்கத்தை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண முயல்வதே தற்போது முக்கிய நோக்கமாக விளங்கவேண்டும் ,தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வை காணாவிட்டால் இலங்கை கிரேக்கத்தின் நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கயை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான ஐக்கியப்பட்ட நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் பலனளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments