போலத்து எல்லையில் அமைந்த உக்ரைன் இராணுவத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்


போலந்து எல்லையில் அமைந்துள்ள உக்ரைனின் இராணுவத்தளம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தாக்குதில் வானவே சிவப்பு நிறமாக மாறியது.

போலத்து எல்லைக்கு அருக்கில் அமைந்த லிவிவ் நகருக்கு வெளியே உள்ள யாவோரிவ் பயிற்சித் தளத்தில்  35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் அகதிகள் என மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

ரஷ்யக் கப்பலிலிருந்து ஏவிய 30 ஏவுகணைகள் குறித்த முகாமில் விழுத்து வெடித்தாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.  

தாக்குதல் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகும், ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

சர்வதேச அமைதி காத்தல் மற்றும் பாதுகாப்பு மையம் என்றும் அழைக்கப்படும் தளத்தில் ரஷ்ய ஜெட் விமானங்கள் சுமார் 30 குரூஸ் ஏவுகணைகளை ஏவியுள்ளன என்று எல்விவ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments