உச்ச நாடகம் நடக்கும் காலமிது!

  

இலங்கை அரசிற்கும் - கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகைக்காக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதென தெரியவந்துள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று அவசர அவசரமாக வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் இத்தகவல் உறுதியாகியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இரா. சம்பந்தன்; தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர்.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றிருந்த சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால்; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கூறப்பட்டுள்ளது.

முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்திருந்தவேளையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. மேலும், அன்று மாலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடன்; இடம்பெற்றிருந்த சந்திப்பின்போதும் சந்திப்பு தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில்  ஜெய்சங்கர் வருகையினை முன்னிட்டே கூட்டமைப்புடனான சந்திப்பு நடைபெற்றமை அம்பலமாகியுள்ளது.


No comments