ஆசியாவின் அதிசயம்:மருந்துமில்லையாம்!

 


இலங்கையில் கையிருப்பில் உள்ள மருந்துகளின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துவரும் நிலையில் இலங்கை மருந்து தொழிற்துறை சம்மேளனம் அடுத்த சில வாரங்களில் உயிர்காக்கும் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரித்துள்ளது.

வெளிநாட்டு நாணய நெருக்கடி மற்றும்  மருந்துகளிற்கான நியாயமான விலை திட்டமொன்று இல்லாதமை ஆகியனவே ஏற்படப்போகும் நெருக்கடிக்கு காரணம் என சம்மேளனம்தெரிவித்துள்ளது.

இலங்கை தனக்கு தேவையான மருந்துகளில் 85 வீதமானவற்றை பல நாடுகளில் இருந்து இறக்குமதிசெய்கின்றது ,இதில் 50 வீதமானவற்றை தனியாரே இறக்குமதி செய்கின்றனர்.

மருந்துகளைஇறக்குமதி செய்யபவர்கள் பல முனைகளில் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து இலங்கை மருந்து தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவர் சஞ்சீவ விஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் மருந்துகளிற்கான ஐந்துவீத பற்றாக்குறையை எதிர்கொள்கின்றோம் இதனை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளாவிட்டாலும், உருவாகிவருகின்ற சூழ்நிலை சிறந்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் இறக்குமதிக்கு எல்ஓசிக்களை ஆரம்பிப்பதை வங்கிகள் நிறுத்தவிட்டன,எரிபொருள்களிற்கே முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களிற்குஎ ல்ஓசிக்களை வழங்குவதற்கு போதுமான  அந்நிய செலாவணி இல்லை என வங்கிகள் தெரிவிக்கின்றன எங்களால் மருந்துகளை இறக்குமதிசெய்யமுடியாவிட்டால் அடுத்த இரண்டு முதல் ஆறுவாரங்களிற்குள் மருந்துகள் முற்றாக முடிவடையும் என அஞ்சுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகளவு பயன்படுத்தப்படும் வலிநிவாரணிகளிற்கு அப்பால் உயர் இரத்த அழுத்தம்,நீரிழிவு போன்றவற்றிற்கான மருந்துகளிற்கும்சில அன்டிபாட்டிக்குகளிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என சம்மேளனம் தெரிவிக்கின்றது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கு 25 முதல் 30 மில்லியன் டொலர்கள் தேவை சம்மேளனம் மதிப்பிட்டுள்ளது.


No comments