ஆரம்பமானது கச்சதீவு!

 


வரலாற்று பெருமை மிக்க கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை கச்சதீவு உற்சவத்தில்  யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மீனவ சங்கப்பிரதிநிதிகளும்  கலந்துகொண்டனர்.

அதேவேளை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீனவ சங்க பிரதிநிதிகளிடையே  கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது தமிழ்நாட்டை சேர்ந்த மீனவபிரதிநிதிகள் மற்றும் வடபகுதி மீனவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

No comments