தாக்குதல்களை நிறுத்த முடியாது! சர்வதேச நீதிமன்ற உத்தரவை நிராகரித்து ரஷ்யா!


உக்ரைன் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன் அரசாங்கம், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையில் சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது.  அதில், உக்ரைன் மீது நடத்தி வரும் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது.  மேலும், தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரஷ்யா நிராகரித்துள்ளது.  

No comments