இலங்கை:ஏழரை தாண்டி இனி பத்து மணியாம்!இலங்கையில் தற்போது அமுலில் உள்ள மின்துண்டிப்பு ஏழரை மணித்தியாலத்திலருந்து பத்து மணித்தியாலமாக எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்கவுள்ளது.

இதனிடையே டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும் இலங்கைக்கு வரவுள்ளன.

அதில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் டொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் டொன் சூப்பர் டீசல் இருப்பதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மற்றைய கப்பலில் 28,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு பெற்றோல் இருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் எண்ணெய் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார்

No comments