உண்ண பாண் கூட இல்லை:வேவு விமானம் வாங்கும் கோத்தா!



இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது .

அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்ட அமைச்சரவை குறிப்புகள் மற்றும் இணைப்பு ஆவணங்கள் மூலம் புலனாகியுள்ளது .

முக்கால்வாசி ஒப்பந்தங்களில் ஏற்கனவே அமைச்சரவை கைச்சாத்திட்டுள்ளது-அவற்றின் ஆபத்தான அபத்தமான விதிமுறைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன .

பசில் ராஜபக்சவின் சமீபத்தைய இந்திய விஜயத்திற்கு முன்னர் அவ்வாறான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டியிருந்ததால் இவ்வாறானதொரு தீர்மானம்  எடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விளக்கம் மற்றும் நியாயம் என்ற அமைச்சரவை குறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

டிஓ-228 டோனியர் வேவு விமானத்தை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமையுடன்  இந்திய அரசாங்கம் வழங்கிய முதலாவது அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 2018 ஜனவரியில் புதுடில்லியில் இடம்பெற்ற இலங்கை இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு மாநாட்டில் இலங்கையின் கடற்படையின் கரையோர கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக இரண்டு டோனியர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது 

எனினும் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கவில்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ளேயும் வெளியேயும்  கண்காணிப்பில் ஈடுபடுவதற்கும் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தினை கண்காணிப்பதற்கும் இரண்டு விமானங்களில் ஒன்றை இலங்கை கடற்படை பயன்படுத்தும் என அமைச்சரவை பத்திரம் தெரிவித்துள்ளது .

இதேவேளை இதே யோசனையில் மாற்றங்களை மேற்கொண்டு புதிய யோசனையை முன்வைத்துள்ள இந்தியா இரண்டுவருடங்களிற்கு பின்னர் இரண்டு விமானங்களில் ஒன்றை அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்க தயார் என தெரிவித்திருந்தது.அதுவரை அந்த விமானத்தை இந்திய கடற்படை பயன்படுத்தும் என தெரிவித்திருந்த இந்தியா ஒரு விமானத்தை இலங்கை கடனடிப்படையில் கொள்வனவு செய்யவேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்திருந்தது.

இந்த யோசனைக்கான தனது சம்மதத்தை மார்ச் 2ம் திகதி ( 2022) பாதுகாப்பு அமைச்சு இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற்படையினர் விமானப்படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கும் விமானத்தின் தொழில்நுட்ப பணிகளிற்காகவும் ஐந்து இந்திய அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

அவர்களிற்கான செலவுகளை இலங்கை பொறுப்பேற்கும்.

இதில் பாரதூரமான விடயம் என்னவென்றால் இலங்கைக்கான இந்திய தூதுவர் வழஙகிய ஆவணத்தில் அமைச்சரவையின் அனுமதியின்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கையெழுத்திட்டுள்ளார்.

No comments