முதலில் சோறு:பின்னரே தீர்வாம்!


கோத்தபாய பாணியில் முதலில் இயல்புநிலை பின்னர் அரசியல் தீர்வென தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளும் சந்தித்து கலந்துரையாடியிருந்தன.

கொழும்பு இந்திய இல்லத்தில் நேற்று (28) இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.

அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

எனினும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசிற்கு அழுத்தங்கொடுக்க வேண்டாமெனவும் தற்போது அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்க்க உதவவும் இந்திய அமைச்சர் கூட்டமைப்பிடம் கோரியுள்ளார்.

இதேவேளை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார்.




No comments