டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை!


டென்மார்க் 2010 க்குப் பிறகு பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் திட்டத்தை வெளியிட்டது. 

அடுத்த தலைமுறை எந்தவொரு புகையிலையையும் புகைப்பதை தடுப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் Magnus Heunicke ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போதைய விதிகளின்படி, 18 வயதுக்குட்பட்ட டேனிஷ் குடிமக்கள் புகையிலை வாங்கவோ அல்லது எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை புகைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 31% பேர் இன்னும் புகைபிடிப்பதாக ஹியூனிக் கூறினார்.

நோர்டிக் நாட்டில் புற்று நோய்க்கு புகைபிடித்தல் முக்கிய காரணமாகும் எனவும், வருடத்திற்கு 13,600 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டேனிஷ் புற்றுநோய் சங்கம் நியமித்த ஒரு கணக்கெடுப்பின்படி 64% பேர் 2010க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனையைத் தடை செய்யும் திட்டத்திற்கு ஆதரவாக உள்ளனர். 18-34 வயதுடையவர்களில், 67% பேர் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர்.


No comments