சேர் என்னை கலைக்கவில்லை:கப்ரால்!இலங்கையின்  மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாலும் அஜித் கப்ராலை மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையிலேயே ஜனாதிபதி தன்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தான் தொடர்ந்து பதவிவகிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments