23 : சர்வகட்சி மாநாடு-இறங்கிவருகிறார் கோத்தா!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டுக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் சுதந்திரகட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் 15 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதில் சர்வகட்சி மாநாடு தொடர்பான யோசனையும் ஒன்று.
நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி மாநாட்டை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் பிரகாரமே சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Post a Comment