வயல் வேலையிலீடுபட்ட இளைஞன் மரணம்!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து  உயிரிழந்தார்.

வடமராட்சி - கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக வயல் வேலையில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், கரவெட்டி - கீரிப்பல்லி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரமூர்த்தி  நிதர்சன் (வயது 26) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக சகோதரனுடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோதே திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். 

உடனடியாக அவரை பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வயலில் ஏதோ ஒன்று குத்தியதில் விசம் ஏறியே இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

No comments