உக்ரைன் பதற்றம்: தூதரகத்தை மூடிகிறது அமெரிக்கா!


உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே தூதரகத்தை மூடுவதாக அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.

நமது நாட்டுக்கு மிகப்பொிய எதிரி பீதி என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். அதேநேரம் அவர் அமைத்தியை வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கும் மேற்கு நாடுகள் உட்பட 10 மேற்பட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.

நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் மக்களைக் காப்பாற்ற உக்ரைனுக்கு தங்கள் நாட்டின் படைகளை அனுப்பமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

அத்துடன் உக்ரைன் நாட்டுக்கு பயிற்சி அளிக்க அனுப்பிய அமெரிக்கப் படையினர் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

No comments