வடக்கில் முன்னணி,சுதந்திரக்கட்சி கூட்டங்கள்!

வடபுலத்தில் இன்று காலை முல்லைதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திர கட்சியினதும் தேசிய மாநாடுகள் நடந்தேறியுள்ளது.

இன்று மாலை முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் பங்கேற்புடன் வடமராட்சியின் குஞ்சர்கடை மைதானத்தில் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் மாநாடு முல்லைதீவில் இன்று அதேவேளை காலை நடைபெற்றிருந்தது.

கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அக்கூட்டம் இடம்பெற்றிருந்து.

முத்திரைச்சந்தி பாணியில் சுதந்திரக்கட்சி கூட்டத்திற்கும் பெருமளவு வாகனங்களை ஆட்களை ஏற்றியிறக்குவதில் ஈடுபட்டன.No comments