ஊடகவியலாளர் தில்லைக்கு கௌரவம்!

 


ஊடகத்துறையில் 50வது வருடத்தை பூர்த்தி செய்யும் மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களின் சேவையை பாராட்டும் நிகழ்வு இன்று காலை 10-00 மணியளவில் மைக்கல் விளையாட்டுக்கழக பொது மண்டபத்தில் கழகத்தலைவர் தங்கவடிவேலு வேணுகானன் தலைமையில் இடம் பெற்றது.இரத்தினம் தயாபரன்  கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தனர்களாக  சிரேஸ்ட ஊடகவியலாளர்களான ந.வித்தியாதரன், ந.பொன்ராசா ,கனகராஜா ஊடகவியலாளர் ஹரிகரன் ,ஊடகவியலாளர் க- உதயராசா என பலரும் பங்கெடுத்திருந்தனர்.யாழ்.ஊடக அமைய தாபகர் இ.தயாபரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க,காலைக்கதிர்  பத்திரிக்கையின் ஆசிரியரும்   உதயன் பத்திரிக்கையின் முன்னை நாள் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் தனது நீண்டகால ஊடக நண்பர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு வாழ்த்து  தெரிவித்து மாலை அணிவித்திருந்தார்.


No comments