500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து


எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் இன்று கைச்சாத்திட்டுள்ளது. 

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டொலர்களின் இருப்புகளின்றி சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றது.

இவ்வாறான நிலைமையை கருத்தில் கொண்டு எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாக இந்தியாவிடமிருந்து பெற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

No comments