3 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்: போரை நிறுத்துவது குறித்து யோசிக்கலாம்!! புடின்


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் பேசியுள்ளார்.  உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே இராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் புடின்.

கிரிமியா தீபகற்பம் ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டே இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இதை எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும் என்று புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முதலாவது கிரிமியா தீபகற்பத்தின் மீதான ரஷ்ய இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். 

இரண்டாவது உக்ரைன் நாட்டின் இராணுவ பலம் குறைக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக முக்கியமாக உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும். அதாவது நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். உக்ரைன் நாட்டில் இனி நேட்டோ வீரர்களைப் பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது.

என இந்த மூன்று நிபந்தனைகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனிடம் ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments