உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!!


உக்ரைன் மீது இன்று வியாழக்கிழமை ரஷ்யா போரைத் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனின் இராணுவ விமானம் ஒன்று தலைநகர் கெய்விற்கு அருகே 20 கிலோ மீற்றர் தொலைவில் ரஷ்ய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விமானத்தில் 14 பேர் இருந்ததாகவும் அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அவசரகாலப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விமானம் விபத்தில் வீழ்ந்தாக உக்ரைன் தெரிவிக்கின்றது.

உக்ரைன் மீது தரை, கடல், வான் என அனைத்து வழிகளிலும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

No comments