கூட்டமைப்பு: முன்னணி, கூட்டணி கூட்டாக ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நாடாளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வன ஜீவராசிகள் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போதே சபைக்குள் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில்   ஜனாதிபதி செயலக வளாகத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்றிருந்தனர்

அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்துகொண்டுள்ளார்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசனும் கலந்துகொண்டிருந்தார்.

இதனிடையே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து மகஜரொன்றைக் கையளிக்கவே தாம் வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (24) ஜனாதிபதியை சந்திப்பதற்கான எவ்வித முன்னறிவிப்பும் அவர்களால் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி இன்று முற்பகல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலைத்திட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments