உக்ரைனைக் கைவிட்டது நேட்டோ!


உக்ரைனுக்குள் நேட்டோ படைகளை அனுப்பப்போவதில்லை அந்த எண்ணமும் இல்லை எனவும், உக்ரைனுக்கு நேட்டோ துணை நிற்கும் என்று  அதன் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென்பெர்க்  தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு அருகில் உள்ள நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து, ரூமேனியா, ஹங்கோி, ஸ்லோவோக்கியா மற்றும் பால்டிக் நாடுகளான லத்வியா, லிதுவியா, லிதுவேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அங்கு நேட்டோ தங்களது படைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

நாங்கள் நேட்டோவின் பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். களமுனை இராணுவத் தளபதிகள் படையினரை அதிகரிக்க முடியும்.

ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் எல்லையில் தயார் நிலையில் உள்ளன. 120க்கு  போர்க் கப்பல்கள்  வடக்கு முதல் மத்தியதரைக் கடல் வரை உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்யா ஆதிக்கத்திலிருந்து நேட்டோ கூட்டணி நாடுகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையையும் செய்வோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments