ஜேர்மனியில் வாகன விபத்து !! 31 மகிழுந்து தேசம்! வீடு வாகனங்கள் பற்றி எரிந்தன!


ஜேர்மனியின் தெற்கு நகரான நூரெம்பேர்க்கில் வெளியே நடத்த வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 31 மகிழுந்துகள் சேதமடைந்தன என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றிருந்தது. பாரவூர்த்தி ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் நகரத்தின் வீதியில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் அதனைப் புறக்கணித்து பாரவூர்த்தியைச் ஓட்டியதால்  இந்த விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் மூவர் கயமடைந்தனர். நிறுத்தப்பட்ட மகிழுந்துகள் மீது பாரவூர்தி மோதியதால் மேலும் 31 மகிழுந்துகள் சேதமடைந்தன.

பாரவூர்தி, மகிழுந்துகள் தீ பிடித்து எரிந்ததால்  ஒரு வீட்டின் முகப்பு  எரிந்து நாசமாகியது.

குடிபோதையில் பாரவூர்தியைச் செலுத்திய 50 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜேர்மனியில் நிரந்தர வதிவிடம் அல்லாதவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments