பிரிவிணைவாதிகளின் தாக்குதலில் தப்பியோடும் உக்ரைன் படையினர் மற்றும் ஊடகவியலாளர்கள்!!


உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் இருந்து ராணுவத்தினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பதுங்கி ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.

உக்ரைன் நாட்டில் தொழிற்சாலைகள் நிறைந்த டொனட்ஸ்க் நகரில் பல ஆண்டுகளாக ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத இயக்கங்களுக்கும், உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

அங்குள்ள கண்காணிப்பு நிலையத்துக்கு சென்ற ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மீது பிரிவினைவாத அமைப்பினர் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நிகழ்த்தினர். அவர்கள் பதுங்கியபடியே அங்கிருந்து தப்பி சென்றனர்.

No comments