இலங்கையில் இன்றும் மின்துண்டிப்பு!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இன்றும்(21) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

போதிய மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தினால் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இதேவேளை, தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஒன்றரை மணித்தியால மின்வெட்டு தென் மாகாணத்தில் மாத்திரம் இன்று (21) அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


No comments