கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவசர நிலை பிரகடனம்!


கொவிட் தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 50 ஆண்டுகளுக்கு பின் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார் கனேடியப் பிரதமர்.

பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கனடா அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டம் பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. தலைநகரம் போராட்டத்தால் ஒட்டாவா முடக்கப்பட்டது. கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலம் முடக்கப்பட்டது. இனதால் அமெரிக்கா - கனடா பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களை உடனடியாக கைது செய்யவும், பாரவூர்த்திகளை பறிமுதல் செய்யவும் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் 1970ம் ஆண்டுக்கு பிறகு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது.

போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை இராணுவம் களமிறக்கபப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது போராட்டக்காரர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments