நல்லாட்சி மைத்திரி யாழில்!இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து தனது ஆழ்ந்த கவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியுள்ளார்.தற்போதைய அரசினால் மக்கள், குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருவது மிகவும் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய பங்குதாரராக சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் தனது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும்  அவர்  தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் பிரச்சினைகளை வெளிப்படையாகக் கூறுவதற்கு சுதந்திரக் கட்சி தயங்காது எனவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் வடமராட்சியின் குஞ்சர்கடை விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.


No comments