பஸில் பதவி விலகவேண்டும்!கறுப்புசந்தையில் பெற்ற டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதால் அவர் பதவிவிலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்திவேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

எவரும் கறுப்புபணத்தை பயன்படுத்துவதற்கு எங்கள் நாட்டு சட்டத்தில் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தடைகள் விதிக்கப்பட்ட நாட்டுடன் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடுவதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணைவழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments