சத்தியமூர்த்தி நினைவேந்தல்


 

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

யாழ். ஊடக  அமையத்தின்  இணைப்பாளர் கு. செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவுதின நிகழ்வில் அவரின் திருவுருவப் படத்திற்கு சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர் இளங்கீரன் தீபமேற்றி மாலை அணிவித்தார். தொடர்ந்து சக ஊடகவியலாளர்கள்  மலர்தூவி  அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் நினைவுப் பேருரையாற்ற நன்றி உரையை இளங்கீரன் ஆற்றினார்.

ஊடகத்துறையில் 1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய இவர், 2009 பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமுற்று இறந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments