மாவை இளைஞரணி மும்முரம்!தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரனால் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டமானது நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த  கையெழுத்து போராட்டத்தில் இன்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராயா முதலாவது ஒப்பத்தை இட்டு ஆரம்பித்து வைத்தார்.

இதில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொது அமைப்புக்களுடன் பொதுப்  பிரதிநிதிகளும்  பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக் கோரி கையெழுத்திடுகின்றனர்.

No comments