இந்திய படகு மீண்டும் தொழிலில்!ஏலத்தில் பங்கெடுத்து கொள்வனவு செய்த இந்திய ட்ரோலளர் படகுகளை உள்ளுர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடிக்கே பயன்படுத்துவரென எச்சரித்;துள்ளன உள்ளுர் மீனவ அமைப்புக்கள்.

நேற்றைய தினம் ஏலம் விடப்பட்ட படகொன்றை அந்த இடத்திற்கு வருகை தந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் 5 லட்சம் ரூபா பெறுமதி கணிக்கப்பட்ட படகினை ஏலத்தில் தொடர்ச்சியாக போட்டியிட்டு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா உட்ச தொகையை கேட்டு படகை பெற்றுக்கொண்டார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய சமயம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் நேற்றைய தினம் காரைநகரில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் ஏலமிடப்பட்டமை தெரிந்ததே.

இதனிடையே ஏலம் விடப்பட்ட கட்டணத்தை செலுத்தி தமது படகுகளை தாமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டுமென தமிழக மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments