பாடசாலைகளை திறக்கவேண்டாம்:ஆசிரிய சங்கம்!


 இலங்கையில்  க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

​​பெப்ரவரி 4ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலை களையும் மூட வேண்டும் என ஒன்றியத்தின் பிரதம செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அமைப்பில் கொரோனா தொற்று அதிகரிப்பு தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 10 ஆம் திகதி அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு வரவழைக்க அரசாங்கம் எடுத்த முடிவு, பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் பரவலை அதிகரித்தது.

பாடசாலைகள் முழு வீச்சில் செயற்படுவதால் கூட்டங்களை நடத்த முடியாத நிலை உள்ளது.

எனவே அனைத்துப் பாடசாலைகளும் பெப்ரவரி 4ஆம் திகதி மூடப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் மாத்திரமே சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

No comments