இந்திய மீனவர்கள் தடுத்து வைப்பு!நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டித் துறைமுகப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு இன்று காலை யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களது மேலுமொரு தொகுதி இழுவைப்படகுகள் இன்றைய தினம் காங்கேசன்துறை முகத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments