உக்ரைன் நெருக்கடி: ரஷ்ய - ஜேர்மனி தலைவர்கள் சந்திப்பு: போரை விரும்பவில்லை!!


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் ஜெர்மனியின் சான்ஸ்சிலர் ஓலாஃப் ஷோல்ஸும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். 

உக்ரேனிய எல்லையில் இருந்து தனது படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா கூறிய சிறிது நேரத்தில் சில சந்தேகங்களுடன் மேற்கு நாடுகளால் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன.


ரஷ்யா தனது பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு சாதகமான பதில்களை பெறவில்லை என்றாலும், ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான வரம்புகள் மற்றும் இராணுவ வெளிப்படைத்தன்மை குறித்து அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் பேச்சுவார்த்தைக்கு மொஸ்கோ தயாராக இருப்பதாக புடின் கூறினார்.

ரஷ்ய துருப்புக்களின் பாரிய நிலைநிறுத்தத்தால் பல வாரங்களாக பதட்டங்கள் தூண்டப்பட்ட பின்னர், உக்ரேனைச் சுற்றி ஒரு போரை விரும்பவில்லை என்று ரஷ்ய தலைவர் வலியுறுத்தினார்.

எங்களுக்கு ஒரு போர் வேண்டுமா அல்லது வேண்டாமா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றார். அதனால்தான் பேச்சுவார்த்தை செயல்முறைக்கான எங்கள் முன்மொழிவுகளை நாங்கள் முன்வைத்தோம் என்று அவர் ஜேர்மன் அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.


ஜேர்மனி சான்ஸ்சிலருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய விளாடிமிர் புடின், உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் இருந்து விலக்கி வைக்கவும், ரஷ்ய எல்லைகளுக்கு அருகே ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்தவும் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கூட்டணிப் படைகளை திரும்பப் பெறவும் மாஸ்கோவின் கோரிக்கையை அமெரிக்காவும் நேட்டோவும் நிராகரித்தன என்று சுட்டிக்காட்டினார்.

No comments