மெட்டாவின் பங்குகள் தொடர் வீழ்ச்சி!! 13வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார் ஜுக்கர்பெர்க்


மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ச்சியாக விலை வீழ்ச்சி அடைந்ததால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உலக

பணக்காரர்கள் வரிசையில் 13 வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 82 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க் 13 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

91 புள்ளி 1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 10 வது இடத்தை பிடித்து ஆசியாவின் முதல் பணக்காரர் ஆனார். முகேஷ் அம்பானி 89 புள்ளி 2 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 11 வது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

No comments