நாளை கொக்கிளாயில் போராட்டம்!


முல்லைத்தீவு மாவட்டம்  கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வு என்ற பெயரிலான நில அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நாளை (12) காலை 09.00 மணியளவில் கொக்கிளாய் பாடசாலைக்கு முன்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்கிளாய் கிழக்குப் பகுதியில் அண்ணளவாக 12 கிலோமீற்றர் தூரத்திற்குள் அடங்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட ஏற்பாடாகியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments