சுதந்திர தினம் :போகமாட்டேன்-மல்கம்!


இலங்கையில் இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இதுவரையிலும்  நீதி கிடைக்கவில்லை. மற்றும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பணியாற்றிய இருவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அசாதாரண முறையில் இவ்விருவரையும் கைது செய்தமை, ஆகிய காரணங்களை அடிப்படையாக வைத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


No comments