சிலுவை முன் சத்தியம் செய்ய தயராகிறார் மைத்திரிஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை என எந்த தேவாலயத்திலும் சிலுவையின் முன்னாள் தன்னால் சத்தியம் செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறப்போவதை அறிந்திருந்தும் நான் வெளிநாடு சென்றேன் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரோ புலனாய்வு தரப்பினரோ தனக்கு தகவல் வழங்கியிருந்தால் நான் வெளிநாட்டிற்கு சென்றிருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருக்கும்வேளை தாக்குதல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் நான்  உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான உத்தரவை வெளியிட்டிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்

No comments