பதவி விலகினார் லண்டன் காவல்துறை ஆணையாளர்!


லண்டன் மாநகரக்காவல்துறை ஆணையாளர் டேம் கிரெசிடா டிக் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக எழுந்து சர்சைகளை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

டேம் கிரெசிடா டிக்கின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இல்லை என லண்டன் மேயர் சாதிக் கான் தெளிவுபடுத்திய பிறகு தனக்க வேறு வழி இல்லாமல் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

பாலியல், இனவெறி மற்றும் ஓரினச்சேர்க்கை மொழியைப் பயன்படுத்திய அதிகாரிகள் அனுப்பிய செய்திகளை காவல்துறை கண்காணிப்புக்குழு கடந்த வாரம் வெளியிட்டதை அடுத்து அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கண்காணிப்புக் குழுவின் கருத்துக்கள் குறித்து தான் கோபமாக இருப்பதாக கூறியதாகவும், பதவி விலகும் எண்ணம் எதுவும் இல்லை என டேம் கிரெசிடா டிக் கூறினார்.

ஆனால் டேம் கிரெசிடாவின் பதிலில் திருப்தி அடையவில்லை என்றும், அவர் ஒதுங்கிவிடுவார் என கான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

40 ஆண்டுகால காவல் பணிக்காக காவல்துறை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர் டேம் கிரெசிடா டிக் இன்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதிய ஆணையாளர் நியமனம் தொடர்பாக உள்துறை செயலாளருடன் நெருக்கமாக பணியாற்றுவேன் என்று லண்டன் மேயர் மேலும் கூறினார்.

No comments